×

4 தலைமுறை வாரிசுகளுடன் 110வது பிறந்த நாள் விழா கொண்டாடிய மூதாட்டி

பண்ருட்டி: மூதாட்டியின் 110வது பிறந்தநாளை ஊரைக்கூட்டி கறி விருந்து படைத்து திருவிழாபோல் உறவினர்கள் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திர படையாட்சி- ராசாம்பாள். இவர்களுக்கு 14 பிள்ளைகள். 7 பேர் இறந்துவிட்டனர். கடந்த 2011ல் சந்திர படையாட்சி இறந்தார். கடைசி மகனான ஞானசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் பராமரிப்பில் ராசாம்பாள் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ராசாம்பாளுக்கு 110வது பிறந்தநாள். ஊரையே அழைத்து கறி விருந்து போட்டு திருவிழாபோல ராசாம்பாள் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடினர். விழாவில் அவரது பிள்ளைகள் 7 பேர், பேரன்கள் 30 பேர், கொள்ளுபேரன் 53 பேர் என 80 பேர் கலந்துகொண்டனர். 5 கொள்ளு பேரன்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்கள் வீடியோ கால் மூலம் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post 4 தலைமுறை வாரிசுகளுடன் 110வது பிறந்த நாள் விழா கொண்டாடிய மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Panruti ,Chandra Pedayakshi-Rasambal ,Cuddalore district ,
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி