திருப்பூர்: ஒன்றிய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். ஒன்றிய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழில் அமைப்புகள் இணைந்து இன்று முதல் தங்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
சொத்து வரி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிராக நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதன்படி இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றுவது எனவும், வருகின்ற 18ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்தனர்.
அதன்படி, திருப்பூர் அரிசி கடை வீதி, பழைய மார்க்கெட் வீதி, புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளில் வணிகர்கள் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை மற்றும் அதிமுகவினர் ஆதரவளித்துள்ளனர். ஒன்றிய அரசு வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு திருப்பூரில் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி வணிகர்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.