சென்னை: ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக சுதேசி நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!
கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post 2024க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.