×

மீண்டும் தமிழ்நாடு அரசுடன் மோதும் ஆளுநர்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளார். அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அரசின் அறிவிக்கையை திரும்பப் பெற ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநர் பரிந்துரைத்திருந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி பெயர் இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி பெயர் தமிழ்நாடு அரசின் அறிவிக்கையில் இடம்பெறவில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. யுஜிசி தலைவர் பிரநிநிதி பெயர் இடம்பெறாததால் அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறுமாறு ஆளுநர் கோரியுள்ளார். யுஜிசி பிரதிநிதி இடம்பெற தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கூறியதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர், தமிழ்நாடு அரசு, பல்கலை. ஆட்சி மன்றக் குழு பிரதிநிதி என மூவர் இடம் பெறுவர். தேடுதல் குழுவில் நான்காவதாக யுஜிசி பிரதிநிதியை ஆளுநர் இடம்பெறச் செய்வதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

The post மீண்டும் தமிழ்நாடு அரசுடன் மோதும் ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Governor ,R. N. Ravi ,Annamalai University ,Deputy Minister's Search Committee ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு...