×

கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு

 

தர்மபுரி, டிச.9: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கோலப்போட்டியில், வெற்றி பெண்களுக்கு வேளாண்துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நல்லம்பள்ளியில் கோலப்போட்டிகள் நடந்தது. மகளிருக்கான திட்டங்களை மையமாக கொண்டு நடந்த இப்போட்டிகள் நல்லம்பள்ளி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பூர் மற்றும் சாமிசெட்டிபட்டி ஊராட்சிகளில் நடந்தது.

200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், ஆ.மணி எம்பி, நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக துணை செயலாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

The post கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri East District DMK ,Minister of Agriculture ,Deputy ,Chief Minister ,Udayanidhi ,Deputy Chief Minister ,
× RELATED சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள்...