பெங்களூரு: பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளியில் 2017 – 2022 காலக்கட்டத்தில் பள்ளியில் படித்தபோது குற்றம்சாட்டப்பட்ட அந்த நபருடன் சிறுமியாக இருந்த மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் காதலித்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து, அந்த சிறுமியுடன் குற்றம்சாட்டப்பட்ட நபர் உறவு கொண்டுள்ளார்.
அப்போது அதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து வைத்துக்கொண்ட அந்த வாலிபர், அதை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கிவிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். அவர்களது காதல் வளர வளர மைனராக இருந்த அந்த பெண்ணும் 18 வயது பூர்த்தியாகி மேஜராகிவிட்டார்.
வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து தனது பாட்டியின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1.25 கோடி பணத்தை பல வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பிய அந்த பெண், கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாக மட்டுமே ரூ.1.32 கோடி கொடுத்துள்ளார். நீண்டகாலமாக மிரட்டலுக்கு பயந்து ரூ.2.57 கோடியை அந்த பெண் கொடுத்த நிலையில், இன்னும் ஆடம்பர வாகனங்கள், பொருட்கள், தங்க நகைகளை கேட்டு வாலிபர் மிரட்ட, தொல்லை தாங்க முடியாமல் இளம்பெண் புகார் அடிப்படையில் போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர்.
The post அந்தரங்க வீடியோவை காட்டி ரூ.2.57 கோடி பறித்த வாலிபர்: சொகுசு கார் கேட்டு மிரட்டியதால் சிக்கினார் appeared first on Dinakaran.