×

பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயல்: முத்தரசன் கண்டனம்

சென்னை: பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலும் பெருமழையும், சூறாவளியும் சேர்ந்து 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு போர்க்கால வேகத்தில் ஈடுபட்டிருந்தாலும் இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது 6 மாதங்களாகும் என கூறப்படுகிறது. புயல் நிவாரண நிதியாக ரூ.2,475 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரியிருந்தார். ஆனால், ஒன்றிய அரசு ரூ.945 கோடி நிதி விடுவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இது முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, வழங்கப்பட்ட நிதி அல்ல என்பது உண்மையாகும் என தெரிவித்தார்.

The post பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது மனிதாபிமானமற்ற செயல்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU State ,Chennai ,Mutharasan ,EU government ,Storm Fengel ,Dinakaran ,
× RELATED பாஜக ஆட்சியில் அரசியலமைப்புக்கு...