×

₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

அரூர், டிச.7: கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த சந்தையில் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தைக்கு 175க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு ஆடு எடையை பொறுத்து ₹5,000 முதல் ₹9,700 வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் மொத்தம் ₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Campinallur ,Oodhangarai ,Tirupathur ,Ambur ,Karimangalam ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,
× RELATED அரூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்