×

வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியை வழிநடத்த தயாா்: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது: நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். இப்போது அதை முன்னின்று நடத்துபவர்கள் தான் அதை நிர்வகிப்பது. அவர்களால் முறைப்படி கூட்டணியை நடத்த முடியாவிட்டால், என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்று வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அதன் சுமூகமான செயல்பாட்டை நான் உறுதி செய்வேன். ஆனால் நான் மேற்குவங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை. எனவே நான் இந்தியா கூட்டணியை இங்கிருந்து இயக்க முடியும்’ என்றார்.

The post வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியை வழிநடத்த தயாா்: மம்தா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Mamata Anwari ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,India Alliance ,Mamata ,Dinakaran ,
× RELATED இந்தியாவை வங்கதேசம் ஆக்கிரமிக்க...