×

டெல்லி-நொய்டா சாலையில் சுங்கம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: டெல்லி – நொய்டா விரைவுச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016-ல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு டெல்லி – நொய்டா சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்த நொய்டா ஆணையத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். டெல்லி நொய்டா விரைவுச் சாலையில் சுங்கத் கட்டணம் வசூலிக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. முன் அனுபவம் இல்லாத என்டிபிசிஎல் நிறுவனத்தை அனுமதித்ததால் அந்நிறுவன முறைகேடாக லாபம் அடைந்தது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post டெல்லி-நொய்டா சாலையில் சுங்கம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi-Noida ,Delhi ,Delhi-Noida Expressway ,Allahabad High Court ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...