- கத்தார்
- தில்லி
- நாமக்கல்
- கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்
- ஒன்றிய வெளிவிவகாரம்
- அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- ஓமான்
- தின மலர்
டெல்லி: நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைக்கு கத்தார் நாட்டில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தார். ஓமனுக்கு அனுப்பப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள முட்டைகள் இறக்குமதி செய்யப்படாமல் கப்பலிலேயே உள்ளது. கப்பலில் வைக்கப்பட்டுள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள முட்டைகளை உடனே இறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய முட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு, தற்போது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் எம்பி மாதேஸ்வரன் தெரிவித்தார்.
The post கத்தார் முட்டை ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.