×

பல ஆயிரம் கோடி சொத்து உரியவர்களிடம் ஒப்படைப்பு; நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: விஜய் மல்லையாவும், லலித் மோடியும் பரஸ்பர ஆறுதல்


புதுடெல்லி: நாட்டுக்காக உழைத்த தமக்கும் லலித் மோடிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். நிதி மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபரும் கிங்பிஷர் நிறுவனருமான விஜய் மல்லையா நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தன் ‘எக்ஸ்’ பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்த ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி, ‘வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்தது. நாம் இருவரும் அதை அனுபவித்துள்ளோம். இதுவும் கடந்துபோகும்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் மல்லையா, ‘நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முயற்சி செய்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இருவரும் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் அளித்த பதிலில், ‘பிரபல தொழில​திபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கி​களில் பல்லா​யிரக்​கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளி​நாடு​களுக்கு தப்பியோடினர். அவர்​களுடைய சொத்துகள் முடக்​கப்​பட்டன. பாதிக்​கப்​பட்ட பலருடைய சொத்துகளை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்​தின் கீழ், அமலாக்கத் துறை மீட்டு உரிய​வர்​களிடம் ஒப்படைக்​கப்​பட்​டுள்​ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடி​யாகும். அதில், விஜய் மல்லை​யா​வின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கி​யிருந்த வங்கி​களுக்கு திருப்பி அளிக்​கப்​பட்ட ரூ.14,000 கோடி​யும் அடங்​கும். அத்துடன் வைர வியாபாரி நீரவ் மோடி​யின் சொத்துகளை விற்று ரூ.1,053 கோடி வங்கி​களுக்கு திருப்பி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி​யில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி​விட்டு வெளி​நாடு தப்பியோடிய மற்றொரு வைர வியாபாரி மெகுல் சோக்​சி​யின் சொத்துகளை விற்க அனுமதி கோரி வங்கி​களும் அமலாக்கத் துறை​யும் இணைந்து மும்பை சிறப்பு நீதி​மன்​றத்தை அணுகி​யுள்ளன. அந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், சோக்​சி​யின் சொத்துகளை மதிப்​பிட்டு ஏலம் விடவும், அதில் வரும் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கி​யில் டெபாசிட் செய்​ய​வும் உத்​தர​விட்​டுள்​ளது’ என்று அவர் கூறினார்​.

The post பல ஆயிரம் கோடி சொத்து உரியவர்களிடம் ஒப்படைப்பு; நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: விஜய் மல்லையாவும், லலித் மோடியும் பரஸ்பர ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Vijay Mallya ,Lalit Modi ,New Delhi ,Vijay Mallaya ,Kingfisher ,
× RELATED ரூ.6203 கோடி கடன் பாக்கிக்கு ரூ.14,131 கோடி...