×

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

திருத்தணி, டிச. 6: திருத்தணி, பள்ளிப்பட்டில் பெஞ்சல் புயல் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழைக்கு திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால், மாநில நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் நிலவியது.
இந்நிலையில், கன மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார். அதன்படி,

நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில், திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் திருத்தணியில் ம.பொ.சி சாலை, பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, அரக்கோணம் சாலைகளில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் குளிர் தார் கலவை கொட்டி சாலை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதேபோல், பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் பள்ளிப்பட்டு ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலையில் கன மழைக்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிய சாலைகளில் குளிர் தார் கலவை கொட்டி சீரமைத்தனர்.

The post திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Pallipate ,Benjal ,Tiruthani, Pallipat ,Thiruvallur district ,Pallipattu ,Dinakaran ,
× RELATED நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...