×

இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழில் மாற்று சினிமாவை உருவாக்குவதில் உறுதியாக இருந்து வந்த இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி (77), நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான ‘குடிசை’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி.

கடைசியாக 2010ம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் சிறப்பு விருது (ஒய்.ஜி.மகேந்திரன்), சிறந்த நடிகை சிறப்பு விருது (சங்கீதா கிரிஷ்) என, தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. பிறகு ஜெயபாரதி படம் இயக்கவில்லை. அவர் மிகவும் வறுமையில் வாடுவதாக தகவல் வெளியானது. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி எழுத்தாளரும் கூட. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.

The post இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kudisai' Jayabharathi ,CHENNAI ,Omanturar Government Hospital ,
× RELATED மாற்று சினிமாவை உருவாக்க பாடுபட்ட இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்