- அமைச்சர்
- கோவி
- செஜியான்
- சென்னை
- அண்ணா பல்கலைக்கழகம்
- கிண்டி, சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: இம்மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவ உதவி மையம் திறக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள்.
இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் (ஜனவரி 8-ம் தேதி வரை) நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன் மாணவர்களுக்கு உதவ உதவி மையம் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. மாணவி புகார் அளித்த குறுகிய நேரத்திலேயே குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக்கூடாது என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்கப்படும். படிப்பினையாக கொண்டு பல்கலை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பல்கலைக்கழக நேரம் தவிர மற்ற நேரங்களில் யாராவது வந்தால் அடையாள அட்டையை காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம் சிசிடிவி-க்கு உட்படாத முட்புதர்நிறைந்த பகுதி. முட்புதர்கள் அகற்றப்பட்டு இரவு நேரத்தில் மின்விளக்குகள் போட்டு போதிய வெளிச்சம் வரும் வகையில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.