×

பல விஷயங்களை முயற்சிக்கும் இந்தியா ஒரு ஆய்வுக் கூடம்: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை


வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் அளித்த ரேடியோ பேட்டியில்,’ சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்’ என்று கூறினார். பில்கேட்சின் இந்த கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியா ஆய்வுக்கூடமா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

The post பல விஷயங்களை முயற்சிக்கும் இந்தியா ஒரு ஆய்வுக் கூடம்: பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : India ,Bill Gates' ,Washington ,Bill Gates ,Microsoft ,Government of India ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...