×

மேஸ்திரியின் டூவீலர் திருட்டு

தர்மபுரி, டிச.2: தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் மருள்காரன் தெருவை சேர்ந்தவர் கணேசன்(38). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூ வாங்குவதற்காக, தனது டூவீலரில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள நிழற்குடை அருகே டூவீலரை நிறுத்தி விட்டு பூ வாங்கச் சென்றுவிட்டார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, அவரது டூவீலரை காணவில்லை. இதுபற்றி கணேசன் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேஸ்திரியின் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ganesan ,Dharmapuri District ,Madikongpalayam Marulkaran Street ,Dharmapuri Town Bus Station ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிர்ப்பு