×

தாம்பரம் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு


தாம்பரம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கக்கன் சாலையில் நேற்று மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், சாலையில் திரிந்த 2 மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி மாநகராட்சி அலுவலகம் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கோகுல் (35) சுகாதார அதிகாரிகளுடன் தகராறு செய்ததார். பிடிக்கப்பட்ட மாடு அவருடையது இல்லை என தெரிந்தும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.  அப்போது மாடு உரிமையாளரான ஜெயரமானும், அவர்களுடன் சேர்ந்து அதிகாரிகளுடன் ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது, பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்த கோகுல், தனது உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த சுகாதார அதிகாரிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்ததாக, கோகுல் மற்றும் அவரது தந்தை மீது தாம்பரம் காவல் நிலையத்தில் சுகாதார அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பிடிபட்ட 2 மாடுகளும் கொண்டமங்கலம் கோசாலையில் அடைக்கப்பட்டன.

The post தாம்பரம் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram road ,Kakan Road ,Tambaram Municipal Corporation ,Gokul ,Mantopu ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தாழ்வான...