சென்னை: பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது. அவற்றுக்கு நாமே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக்கை தடை விதிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உலக நாடுகளில் பிளாஸ்டிக்கை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர்.
ஆனால் நாம் தான் அவற்றை தூர வீசுகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம். இனிவரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை குறை கூற முடியாது. அவற்றுக்கு நாமே காரணம். உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post பேரிடர்களுக்கு நாமே காரணம் இயற்கையை குறை சொல்ல முடியாது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.