×

பெரியார், முதல்வர் குறித்து அவதூறு: பாஜ பிரமுகர் கைது


பல்லாவரம்: பெரியார் மற்றும் முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டார். குரோம்பேட்டை, பாரதிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (45). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ பிரசார பிரிவு தலைவராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக பெரியார் மற்றும் திராவிடம் குறித்தும், முதல்வர், துணை முதல்வர் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், தாம்பரம் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜ பிரமுகர் சதீஷை, நேற்று கைது செய்து பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெரியார், முதல்வர் குறித்து அவதூறு: பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Beriyar ,Baja Pramukh ,BALLWARAM ,BAJA PRAMUGUR ,PERIYAR ,MAHALVAR ,Satish ,Crombate, Bharatipura ,Baja Prasarya Division ,Chengalpattu Northern District ,Baja Pramukar ,
× RELATED பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்