×

பனிப்பொழிவு, வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரிப்பு

புழல்: பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்தது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால், கடந்த 2 நாட்களுக்கு முன் பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக நேற்று காலை மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.

குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கும், ஐஸ் மல்லி ரூ.900க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.600ல் இருந்து ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.1000க்கும் விற்பனை செய்யப்பட்டது. அரளி பூ ரூ.250ல் இருந்து ரூ.400க்கும், சாமந்தி ரூ.120ல் இருந்து ரூ.140க்கும், சம்பங்கி ரூ.80க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை சற்று குறைந்தது. தற்போது, பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது,’’ என்றார்.

The post பனிப்பொழிவு, வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Tamil Nadu ,Koyambedu market ,
× RELATED கன மழையால் கோயம்பேடு மார்க்கெட்...