×

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி


சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருப்பவர் கே.பாலகிருஷ்ணன். அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவருக்கு கடந்த இரு நாள்களாக தொண்டை வலி, நெஞ்சு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவ ஆலோசனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காது, மூக்கு, தொண்டை நல மருத்துவர்கள், பொது நல மருத்துவர்கள் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கே.பாலகிருஷ்ணன் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாள்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Marxist ,K. Balakrishnan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,
× RELATED தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை...