சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை பஸ் சிக்னல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பஸ் சிக்னல் முன்னுரிமை அமைப்பு எம்.டி.சி. பேருந்தை கண்டறிந்து சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் appeared first on Dinakaran.