×

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை நிலைகுலைய செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கான துணைவேந்தர்களை தேடுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவி குறுக்கீடு செய்து நிறுத்தியுள்ளார்.

தேடுதல் குழுவில் 3 நபர்கள் இடம்பெறுவது பல்கலைக் கழக சட்டத்தின் படியான ஒன்றாகும். ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, பல்கலைக் கழக செனட் பிரதிநிதி என அந்த 3 பேர் உள்ளனர். இது போதாது யு.ஜி.சி எனக் கூறப்படும் பல்கலைக் கழக மானியக் குழு பிரதிநிதியும் இதில் இடம் பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார், இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஆளுநர் கூறுவதுபோல தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இணைப்பதன் மூலம் ஆளுநர் விரும்புகிறவர் துணைவேந்தராக கொல்லைப்புற வழியில் நியமிப்பதற்கு வழி ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்க ஆளுநர் முயற்சித்து வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை நிலைகுலைய செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,R.N. Ravi ,Tamil Nadu ,Chennai ,Marxist Communist Party ,State Secretary ,K. Balakrishnan ,Tamil Nadu government ,Chidambaram Annamalai University ,Coimbatore Bharathiar University ,Tamil Nadu Teachers Education Institute… ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்...