×

சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சேலம் சார்பதிவாளர் செந்தாமரை மற்றும் நிலத்தை தனது பெயருக்கு மாற்றிய ஜெயசந்திரன் இருவர் மீதும் சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர், கோயில் சொத்து தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதும் அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தடை இருப்பதும் தனக்குத் தெரியாது என வாதம் வைக்கப்பட்டது. பின்னர், முன் ஜாமின் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வேண்டுமென்றே பத்திரப்பதிவு செய்ய செந்தாமரை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Salem Anjaneyar Temple ,Chennai ,Madras High Court ,Salem ,Senthamarai ,Jayachandran ,Salem Crime Branch… ,Court ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...