×

வாரச்சந்தையில் பைக் திருட்டு

 

தியாகதுருகம், நவ. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகின்றனர். அதேபோல் கடந்த 23ம் தேதியன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அலங்கிரி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் சத்தியராஜ் (37) என்பவர் சந்தைக்கு காய்கறி மற்றும் கால்நடைகளுக்கு கயிறு வாங்குவதற்காக பைக்கை பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது அங்கு நிறுத்திவிட்டு சென்ற பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்தியராஜ், தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாரச்சந்தையில் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Martyrdom ,Kallakurichi district ,Thyagadurugam ,Duraisamy ,Alangiri village ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...