- கள்ளக்குறிச்சி
- நீதிபதி
- ரேம்
- ராமலிங்கம் மஹல் மதி
- கடலூர் மாவட்டம் பெரியானேசலூர்
- கன்னியாமூர் பிரைவெட் பள்ளி
- கல்லகுரிச்சி மாவட்டம் சின்னசேலம்
கள்ளக்குறிச்சி, டிச. 12: கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம்தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இதையடுத்து மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி தாயார் செல்வி இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கின் எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ உரையாடல் பதிவுகள், மரண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரை வழக்கில் சேர்க்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி மதி தாய் செல்வி மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ராம் வரும் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.