×

உண்மைக்கு புறம்பாக பேசிக்கொண்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டிருப்பதா முதல்வர் வேலை? செல்வப்பெருந்தகை சுளீர்

சென்னை: யாராவது ஏதாவது உண்மைக்கு புறம்பாக பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதா முதல்வர் வேலை.? முதல்வருக்கு நிறைய பணிகள் உள்ளன என்று செல்வப்பெருந்தகை காட்டமாக கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் செயல்வீரர்கள் கூட்டம், அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதானி பற்றி அக்கறை உள்ள பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது ஏன் அவர்கள் வாய் திறந்து பேசவில்லை. மக்களுடைய வரி பணம் சுரண்டப்பட்டது. எல்ஐசி பண மோசடி, தேசிய வங்கிகளுடைய பண மோசடி ஆகட்டும், எல்லா பணமும் எடுத்து அதானி நடத்துகின்ற பங்கு சந்தையில் முதலீடு செய்து ஆயிரக்கணக்கான கோடிகள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பற்றி ராமதாசும், அன்புமணியும் ஏன் பேசவில்லை. இதைப் பற்றி எல்லாம் ராமதாஸ், அன்புமணியும் முதலில் பேசட்டும். முதல்வர் சந்தித்தாரா, சந்திக்கவில்லையா என்று பிறகு பேசுவோம். யாராவது ஏதாவது உண்மைக்கு புறம்பாக பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதா முதல்வருக்கு வேலை. முதல்வருக்கு நிறைய பணிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post உண்மைக்கு புறம்பாக பேசிக்கொண்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டிருப்பதா முதல்வர் வேலை? செல்வப்பெருந்தகை சுளீர் appeared first on Dinakaran.

Tags : minister ,Wealthy Sulir ,Chennai ,Selvaperunthagay ,Chief Minister ,Rajiv Gandhi ,Panchayat Raj ,Satyamurthy Bhawan ,Selvaperundagai Suleer ,
× RELATED நிதி அமைச்சரின் விளக்கத்தால்...