சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் அளித்த தகவலே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது. செல்போன் சிக்னல், அறிவியல்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம். எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டாலும் புகார் அளித்தவருக்கு ஒரு நகல் வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டப்படி குற்றம். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி, வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. புகார் கொடுத்த ஒரே நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்டவர் வேறு ஒருவருடன் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஞானசேகரனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – காவல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.