×

அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல எந்த நிறுவனத்திலும் பொறுப்பில் இல்லை: ஆதவ் அர்ஜூனா விளக்கம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், இந்த சோதனை எனக்கானது அல்ல; எந்த நிறுவனத்திலும் நான் பொறுப்பில் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாக கடந்த 2 நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல, அமலாக்கத்துறையின் சோதனை ஆணை எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதையும் ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல எந்த நிறுவனத்திலும் பொறுப்பில் இல்லை: ஆதவ் அர்ஜூனா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aadhav Arjuna ,CHENNAI ,General Secretary ,Liberation Tigers Party ,Dinakaran ,
× RELATED விசிகவை யாராலும் உடைக்க முடியாது: மாநில செய்தி தொடர்பாளர் அறிக்கை