×

விசிகவை யாராலும் உடைக்க முடியாது: மாநில செய்தி தொடர்பாளர் அறிக்கை

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை யாராலும் சிதைக்கவோ உடைக்கவோ முடியாது என மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைத்து விடுவார் என்கிற அச்சம் இருக்கிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை யாராலும் சிதைக்கவோ உடைக்கவோ முடியாது. அதற்கான சூழ்நிலையை கூட உருவாக்க முடியாது. இந்த கட்சி ஆட்சி அதிகார வேட்கையோடு மட்டுமே தொடங்கப்பட்ட கட்சி அல்ல. புரட்சிகர பாதையில் சாதி ஒழிப்பை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு அதற்கான மக்களை அணி திரட்டிய ஒரு பேரியக்கம் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

The post விசிகவை யாராலும் உடைக்க முடியாது: மாநில செய்தி தொடர்பாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bhavalan ,Liberation Tigers Party ,Aadhav Arjuna ,LTTE ,Vishikah ,Dinakaran ,
× RELATED எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி