×

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு மேம்பால பணி முடங்கியதால் 13 கிராம பொதுமக்கள் தவிப்பு

திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த விடையூர் – கலியனூர் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் கடந்த 2016 – 2017 ம் ஆண்டு ரூ.3.60 கோடியில் 120 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆற்றின் நீளம் அதிகமாக இருப்பதால் மேம்பாலம் 120 மீட்டருக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதால் அத்தகைய மேம்பாலம் முழுமை பெறாமல் கடந்த 8 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு பணிகளும் மேற்கொள்ளாமல் முழுமை பெறாமல் இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மேலும் கூடுதலாக ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலம் பணி இருபுறமும் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேல்விளாகம், கலியனூர், மணவூர், நெமிலியகரம், குப்பம்கண்டிகை, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுச்சி, சின்னம்மா பேட்டை, ஜாகிர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்பட 13 கிராமங்கள் பொதுமக்கள் 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தான முறையில் சேற்றில் இறங்கியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தின் முது ஏரியும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்றும் வருகின்றனர். இதனால் அந்த கிராமங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமலும், விவசாயிகள் ஈடுபொருட்கள் கொண்டு செல்வமுடியாமலும், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘’மேம்பால பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு மேம்பால பணி முடங்கியதால் 13 கிராம பொதுமக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kosastale River ,Thiruvallur ,Kosastalle River ,Vidayur ,Galianur ,Dinakaran ,
× RELATED தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின்...