×

ரூ.185 கோடி சொத்து வங்கியிடம் ஒப்படைத்தது ஈடி

புதுடெல்லி: சண்டிகரில் செயல்பட்ட சூர்யா பார்மாசூட்டிகல் லிமிடெட் நிறுவனம் சார்பில் போலியான ஆவணங்கள் அடிப்படையில் கடன் பெற்றதில் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.828.50 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜீவ் கோயல், அல்கா கோயல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.

அவர்கள் 2017 ஜூலை 10ல் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து 2022 அக்டோபரில் அவர்களுக்கு சொந்தமான ரூ.185.13 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.185 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை எஸ்பிஐ வங்கியிடம் நீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை ஒப்படைத்துள்ளது.

The post ரூ.185 கோடி சொத்து வங்கியிடம் ஒப்படைத்தது ஈடி appeared first on Dinakaran.

Tags : ED ,New Delhi ,SBI Bank ,Chandigarh ,Surya Pharmaceutical Limited ,Enforcement Department ,Rajeev Goyal ,Alka Goyal ,Dinakaran ,
× RELATED சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில்...