×

நிபுணர் குழு பரிந்துரைப்படி நீட் தேர்வில் முழுமையான மாற்றத்தை அமலாக்குவோம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு நடந்த மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நீட் தேர்வு முறையில் மாற்றங்கள் செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழு நீட் தேர்வை முழுமையாக ஆன்லைனில் நடத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘நீட் தேர்வு குறித்து நிபுணர் குழு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த உள்ளோம். எனவே வழக்கை 6 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். இதைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

The post நிபுணர் குழு பரிந்துரைப்படி நீட் தேர்வில் முழுமையான மாற்றத்தை அமலாக்குவோம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்...