×

டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு

புதுடெல்லி: எதிரி நாடுகளை குறிவைக்க தற்போது அதிகளவில் டிரோன் பயன்படுத்தப்படுகிறது. எனவே டிரோன்களை சுட்டு வீழ்த்தி வான் பாதுகாப்பை மேம்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அதிக சேதத்தை ஏற்படுத்தும் 23 மிமீ டிரோன் எதிர்ப்பு வெடிமருந்துகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க தகவலுக்கான கோரிக்கை (ஆர்எப்ஐ) விண்ணப்பங்களை பாதுகாப்பு அமைச்சகம் வரவேற்றுள்ளது.

இதில், பொதுத்துறை மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அவற்றின் தகுதி மற்றும் திறன் குறித்து விவரங்களை வழங்க வேண்டும். இதன் மூலம் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வெடிபொருள் தயாரிப்பு பணி வழங்கப்படும்.

The post டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Indian Army ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...