- போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- நமக்கிரிப்பேட்டை
- ரோட்டரி
- சர்வதேச போலியோ தினம்
- இராசிபுரம்
- ராசிபுரம் ரோட்டரி சங்கம்
- ஜனாதிபதி
- முருகானந்தம்
- ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில்...
நாமகிரிப்பேட்டை, அக்.25: ராசிபுரத்தில் சர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கங்களின் ஏற்பாட்டில் போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக தொடங்கிய பேரணிக்கு, ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட ரோட்டரி ஆளுநர் சிவக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம் என்பன போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பள்ளி மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி நாமக்கல் சாலை, பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடை வீதி, ஆத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றடைந்தது. பின்னர், போலியோவை முடிவுக்கு கொண்டு வருவோம் என பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், ரோட்டரி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.
The post போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.