×

₹1.20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், அக்.26: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 40 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ₹101.30 முதல் ₹123.15 வரையிலும், இரண்டாம் தரம் ₹72.30 முதல் ₹99.10 வரை ஏலம் போனது. இதில் கொப்பரை ₹1.20லட்சத்திற்கு ஏலம் போனது. தொடர்ந்து நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், 25 மூட்டை நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ₹20ஆயிரத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது.

The post ₹1.20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்