×

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

குமாரபாளையம், அக்.29: பள்ளிபாளையம் வட்டாரம், அருவங்காடு மற்றும் வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி நாளை முன்னிட்டு புத்தாடை, ஸ்கூல்பேக், பாட நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகள் முதல் 10 பேர் இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்காக புத்தாடையும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி, சுரபி பவுண்டேசன் தலைவர் ராதாகிருஷ்ணன், விடியல் பிரகாஷ், சங்கமம் பிரபாகரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Government High School ,Pallipalayam ,Aruvangadu ,Vemangatuvalasu ,Deepavali ,Puthadai ,
× RELATED வெண்பாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி