×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், அக்.24: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை 25ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை 25ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கலெக்டர் உமா தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Farmers Grievance Redressal Day ,Namakkal Collector ,Uma ,Farmers Grievance Redressal Day ,Namakkal District Collector ,Office ,Dinakaran ,
× RELATED நாமக்கல் கலெக்டர் ஆபிசில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்