×

லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மரணம் அடைந்த உறுப்பினரின் குடும்பத்திற்கு உதவித்தொகை

நாமக்கல், அக்.25: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், இயற்கை மரணம் அடைந்த சங்க உறுப்பினரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், உறுப்பினராக இருந்து இயற்கை மரணம் அடைந்த 11 உறுப்பினர்களின் குடும்ப வாரிசுகளுக்கு, உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சங்கத்தலைவர் அருள், மரணம் அடைந்த 11 உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, தலா ₹25ஆயிரம் உதவி தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் சீரங்கன், இணைச்செயலாளர் சந்திரசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மரணம் அடைந்த உறுப்பினரின் குடும்பத்திற்கு உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Lorry Owners Association ,Namakkal ,Namakkal Taluk Lorry Owners Association ,
× RELATED தொடர் மழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு..!!