×

மின்னல் தாக்கி காளை உயிரிழப்பு

அயோத்தியாப்பட்டணம், அக்.23: அயோத்தியாப்பட்டணம் அருகே வெள்ளாளகுண்டம் ஊராட்சி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு சொந்தமான மாடுகளை அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம். நேற்று மாலை அப்பகுதியில் கனமழை பெய்ததில், திடீரென மின்னல் தாக்கி காளை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் விஏஓ விஜயராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post மின்னல் தாக்கி காளை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bull ,Ayodhyapatnam ,Thangavel ,Kamarajapuram ,Vellalagundam Panchayat ,Dinakaran ,
× RELATED தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட திருமணிமுத்தாற்று தரைப்பாலம்