கெங்கவல்லி, டிச.5: வீரகனூர் அடுத்த சொக்கனூர் பகுதியில், மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, வீரகனூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில், வீரகனூர் எஸ்ஐ கருப்பண்ணன் தலைமையில் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புனல்வாசல் பகுதியை சேர்ந்த குமரேசன்(40) என்பவர், தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குமரேசனை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
The post சந்து கடையில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.