×

அரசு பள்ளியில் ஆய்வு

மல்லசமுத்திரம், செப்.18: மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், பிற்படுத்தப்பட்டோர் நலஆணையர் வெங்கடேஷ் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவி பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். பள்ளியில் சுற்றுபுறம் தூய்மையாகவும், அமைதியாக உள்ளதென தெரிவித்தார். மேலும், மாணவர்களை நேரில் அழைத்து அவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரசு பள்ளியில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Malachamudram Government Men's Secondary School ,Commissioner ,Social ,Welfare ,Venkatesh ,IAS ,Dinakaran ,
× RELATED புகார் அளித்த 24 மணி நேரத்தில்...