- குமாரபாளையம்
- பள்ளிபாளையம் பிரிவு ரோடு
- விடியல் பிரகாஷ்
- எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்கள்
- ரவீந்திரன்
- ராஜாராம்
- குப்பாண்டபாளையம்
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி...
- தின மலர்
குமாரபாளையம், டிச.28: குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள கட்டிடத்தில் 25 பதிப்பகத்தாரின் சுமார் 25 ஆயிரம் புத்தகங்களுடன் கண்காட்சி துவங்கியது. விடியல் பிரகாஷ் வரவேற்றார். எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரவீந்திரன், தொழிலதிபர் ராஜாராம், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா வேலுமணி, மகாலட்சுமி கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். ஏடிஎஸ்பி சண்முகம் ரிப்பன் வெட்டி, கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். கண்காட்சியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி appeared first on Dinakaran.