×

ஆக்லாந்து டென்னிஸ் கோப்பையை தக்கவைத்தார் கோகோ காஃப்

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்த ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். இறுதிப் போட்டியில் உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினாவுடன் நேற்று மோதிய நடப்பு சாம்பியன் கோகோ காஃப் 6-7 (4-7), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 35 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த தொடரில் 2 ஆண்டுகளாக கோகோ தொடர்ச்சியாக 10 வீராங்கனைகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆக்லாந்து டென்னிஸ் கோப்பையை தக்கவைத்தார் கோகோ காஃப் appeared first on Dinakaran.

Tags : Coco Gough ,Auckland Tennis Cup ,AUCKLAND ,ASP Classic tennis ,Auckland, New Zealand ,Ukraine ,Elina Svitolina ,Coco Koff ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…