×

மலேசிய ஓபன் பேட்மின்டன் இன்று துவக்கம்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இன்று முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடங்குகிறது. ஆண்டின் முதல் பேட்மின்டன் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் சி யு ஜென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் இருந்து விலகினார். மற்ற இந்திய வீராங்கனைகளான மாள்விகா பான்சோத், ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உபாத்யாயா ஆகியோர் களம் இறங்குகிறார்கள். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி முதலாவது சுற்றில் சீன தைபேயின் மிங் செ லூ-தாங் காய் வெய் ஜோடியுடன் மோதுகிறது.

The post மலேசிய ஓபன் பேட்மின்டன் இன்று துவக்கம்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : MALAYSIAN OPEN ,BADMINTON ,KOLALAMPUR ,MALAYSIAN OPEN BADMINTON ,Dinakaran ,
× RELATED கிங் பேட்மின்டன் வெண்கலப் பதக்கம் வென்ற லக்‌ஷ்யா சென்