ரியாத்: இத்தாலி கோப்பை, சீரி ஏ ஆகியவை இத்தாலி நாட்டில் மட்டுமின்றி உலக கால்பந்து ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற கால்பந்து போட்டிகளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த 2 போட்டிகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 என 4 அணிகள் மோதும் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி 1988ம் ஆண்டு முதல் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் 2024ம் ஆண்டு சீரி ஏ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இன்டர் மிலன், 2வது இடம் பிடித்த ஏசி மிலன் மற்றும் இத்தாலி கோப்பையை கைப்பற்றிய ஜூவென்டஸ், 2வது இடம் பிடித்த அட்லாண்டா என 4 அணிகள் சூப்பர் கோப்பையில் களம் கண்டன. முதல் சுற்றில் அட்லாண்டாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இன்டர் மிலனும், ஜூவென்டசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஏசி மிலனும் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றன.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த இறுதி ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டின. கூடுதல் வேகம் காட்டியதால் முதல் பாதி முடிவில் இன்டர் மிலன் 1-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. கூடவே 2வது பாதி தொடங்கிய 2வது நிடத்தில் தரேமி கோலடிக்க இன்டர் மிலன் 2-0 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்தது. அதன் பிறகும் நடப்பு சாம்பியன் இன்டர் மிலன் வசம் பந்து இருந்தாலும், அவர்கள் அசந்து இருந்த நேரங்களை சரியாக பயன்படுத்தி ஏசி மிலனின் தியோ(52வது நிமிடம்), கிறிஸ்டியன்(80வது நிமிடம்), ஆபிரகாம்(90+3நிமிடம்) ஆகியோர் கோலடித்து அசத்தினர். அதனால் ஆட்டத்தின் இறுதியில் ஏசி மிலன் 3-2க்கு என்ற கோல் கணக்கில் வென்றதுடன் 8வது முறையாக சூப்பர் கோப்பையை வென்றது. கூடவே சீரி ஏ கோப்பை இறுதி ஆட்டத்தில் தன்னை தோற்கடித்த இன்டர் மிலனுக்கு பதிலடி கொடுத்தது ஏசி மிலன்.
The post இத்தாலி சூப்பர் கோப்பை 8வது முறையாக ஏசி மிலன் சாம்பியன் appeared first on Dinakaran.