- யெலானோ, சக்கரி
- அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ்
- அடிலெய்ட்
- அடிலெய்ட், ஆஸ்திரேலியா
- யெலானோ அஸ்டாபென்கோ
- மக்தலினா
- யெலானோ
- சக்கரி
- தின மலர்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன. அதன் ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை யெலனோ ஆஸ்டபென்கோ(27வயது, 17வது ரேங்க்), போலாந்து வீராங்கனை மேக்தலினா ஃபிரீச்(27வயது, 24வது ரேஙக்) ஆகியோர் மோதினர். சுமார் 2மணி 8 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தின் முடிவில் யெலனோ 4-6, 6-1, 6-1 என்ற செட்களில் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தார். கூடவே 2வது சுற்றுக்கும் முன்னேறினார்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்கோவா(20வயது, 26 வது ரேங்க்), கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி(29வயது, 32வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் அனுபவ வீராங்கனை சாக்கரி ஒரு மணி 14நிமிடங்களில் 6-3, 6-3 என நேர் செட்களில் லிண்டாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். மேலும் டாரியா கசட்கினா, ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா(ரஷ்யா), யுலியா புதின்சேவா(கஜகஸ்தான்), மார்கெட்டா வொண்டர்சோவா (செக் குடியரசு), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து) 2வது சுற்றில் ஆகியோர் நுழைந்தனர்.
The post அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் 2வது சுற்றில் யெலனோ, சாக்கரி appeared first on Dinakaran.