×

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்

 

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தர தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழகத்தில் களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பினரும் கொண்டாடக்கூடிய ஒரு பண்டிகை என்பதால் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அந்த 3 நாட்களும் களை கட்டி காணப்படும். தொடர் விடுமுறை விடப்படுவதால், இப்பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதன்படி, நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வரும் நிலையில், சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலமாக சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  அதன்படி, நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஜனவரி 14ம் தேதி வரை இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர்களுக்கு பலரும் செல்லத் தொடங்கிவிட்டனர். சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 9ம் தேதி முதலே ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதற்காக ஜனவரி 9 முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைபிடிக்கப்படும்.

ஆணையரகம், தொலைபேசி எண்கள்

1. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை – 18004256151

2. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) – 9944253404

3. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) – 9790550052

4 . இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை – 9095366394

5. இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் – 9123593971

6. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் – 9677398825

7. துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் – 98400 23011

8. துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் – 7845636423

9. துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு – 8066940040

10. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி – 9066032343

11. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் – 9025723800

12. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி – 96981 18011

13. துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் – 9585020665.

Tags : Safety ,Chennai ,Pongal festival ,Tamils ,Tamil Nadu ,Pongal ,Mattupongal ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...