×

கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை அயலகத்தமிழர் நாளில் தாய்நிலத்தில் வாழ்த்தினேன்!

கல்வியும் உழைப்பும் கொண்டு பெயரும் புகழும் அடைந்து அயலகங்களில் தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் அவர்களுக்கு அன்பை வழங்கி அரவணைப்போம்! மாபெரும் தமிழ்க்கனவுகளைச் சாத்தியப்படுத்திடும் நமது திராவிடமாடலில் உங்ககனவ சொல்லுங்க என்று கேட்டதும் அவர்களது எண்ணங்களை கனவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நனவாக்கப் பயணிப்போம்!
தமிழால் இணைவோம்! தரணியில் வெல்வோம்! இவ்வாறு பதிவிட்டார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Tamils ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...